Advertisment

பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்காக நடைபாதையை சுத்தப்படுத்திய போலீசார்!

ஆறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவிலில்வருடந்தோறும் தைப்பூசம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த தைப்பூசத்திற்காக காரைக்குடி, தேவக்கோட்டை, கொட்டாம்பட்டி, நத்தம், திருச்சி, மணப்பாறை, தேனி, பெரியகுளம், மதுரை, உடுமலை, பொள்ளாச்சி, கரூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்வது வழக்கம்.

Advertisment

இப்படி பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல்லில் இருந்து பழனி வரைக்கும் சாலையின் ஓரத்திலேயே சிமெண்ட் ஹாலோ ப்ளாக்ஸ் கல் மூலம் நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடைபாதையில் தான் முருக பக்தர்கள் நடந்து செல்வார்கள். அதுபோலதான் இந்தாண்டும் வருகிற 8- ஆம் தேதி நடைபெறும் தைப்பூசத்திற்காக முருக பக்தர்கள் பாதயாத்திரையை தொடங்கியுள்ளன.

dindigul district palani murugan temple

ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த நடைபாதையை இதுவரை சுத்தப்படுத்த ஆர்வம் காட்டாததால் பல ஊர்களில் இருந்து வரும் முருக பக்தர்கள் நடைபாதையில் செல்லாமல் சாலையிலேயே நடந்து செல்கிறார்கள். இதனால் பக்தர்கள் விபத்துகளுக்கும் ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில் தான் பழனி புது தாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14- ஆம் அணி தலவாய் (எஸ்பி) அய்யாச்சாமி உத்தரவின்பேரில் ஏழு எஸ்.ஐ.க்கள், 84 போலீசார் கொண்ட குழு திடீரென முருக பக்தர்களின் நடைபாதையை சுத்தப்படுத்துவதற்காக களமிறங்கினார்கள்.

Advertisment

இந்த பட்டாலியன் போலீசார் பழனியிலிருந்து சத்திரப்பட்டி வரை பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு முருக பக்தர்களுக்காக போடப்பட்ட நடைபாதை புல் புதர்களாக மண்டிக்கிடந்ததை சீர்படுத்தி அந்த நடைபாதையை தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தினார்கள். அதைக்கண்டு அப்பகுதியில் உள்ள மக்களே அந்த பட்டாலியன் போலீசாரே பாராட்டினார்கள். இப்படி முருக பக்தர்களுக்காக பட்டாலியன் போலீசார் சுத்தப்படுத்திய அந்த நடைபாதையில் தற்போது முருக பக்தர்களும் முருகனை தரிசிக்க சென்று கொண்டிருக்கிறார்கள்.

PEOPLES NOT ENTRY Festival palani murugan temple Dindigul district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe