Advertisment

சொத்து தகராறு காரணமாக கைத்துப்பாக்கியால் சுட்டதில் இருவர் படுகாயம்...

dindigul district palani incident theater owner arrested

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர் பகுதியில் இருக்கும் அப்பர் தெருவில் குடியிருந்து வருபவர் பிரபல வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் நடராஜன். இவருக்கும்தட்டான்குளம் பகுதியில் குடியிருந்துவரும் பழனிசாமி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவருக்கும் இடையே 12 சென்ட் நிலம் சொத்து சம்மந்தமாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் மற்றும் அவ்வப்பொழுது சண்டைகளும் இருந்து வந்தது.

Advertisment

இந்த நிலையில்தான் இடத்தை சுப்பிரமணி மற்றும் பழனிசாமி என்பவர் சுத்தம் செய்துகொண்டிருந்த நிலையில் விரைந்து வந்த தியேட்டர் உரிமையாளர் நடராஜன், இது என்னுடைய நிலம் நிலத்தை சுத்தம் செய்வதற்கு நீங்கள் யார் என்று வாக்குவாதம் செய்யவே இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த நடராஜன், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் பழனிசாமி என்பவரை தொடையிலும் சுப்பிரமணி என்பவரை வயிற்றுப் பகுதியிலும் சுட்டுள்ளார்.

Advertisment

dindigul district palani incident theater owner arrested

இதனால் படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்த சுப்பிரமணி என்பவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்த பழனிசாமி என்பவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகின்றது.

இது சம்மந்தமாக திண்டுக்கல் டி.ஐ.ஜி. முத்துச்சாமி, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன், பழனி சரக துணை கண்கானிப்பாளர் சிவா, உட்பட காவல் துறையினர் விரைந்துவந்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் என்பவரை காவல்துறை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். சொத்து தகராறில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul district
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe