Skip to main content

நிலக்கோட்டையை  தக்கவைத்துக்கொண்ட அதிமுக

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் தொகுதியை அதிமுக தக்கவைத்துள்ளது.   நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகர்,  திமுக வேட்பாளர் சௌந்தர பாண்டியன், அமமுக வேட்பாளர் தங்கதுரை ஆகியோர் போட்டியிட்டனர். நடந்து முடிந்த தேர்தலில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் வழக்கம்போல் வத்தலகுண்டு ஒன்றிய வாக்குகள் எண்ணப்பட்டன. 

 

di

 

முதல் மூன்று சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி முன்னிலை வகித்தார்.  நான்காம் ஐந்தாம் சுற்றுகளில் திமுகவின் வாக்குகள் சரசரவென உயர்ந்தன.   கடும் இழுபறி போல் நிலவியது.  ஆறாம் ஏழாம் சுற்றில் அதிமுக 2000 வாக்குகள் முன்னிலை வகித்தது.  

 

 வத்தலகுண்டு ஒன்றிய வாக்குகள் எண்ணும் வரை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டதால் அதிமுகவினர் உற்சாகம் இழந்த நிலையில் இருந்தனர்.   இருப்பினும் வத்தலகுண்டு ஒன்றியம் வாக்கு எண்ணிக்கை முடிவை தேன்மொழி 3600 ஓட்டுக்கள் முன்னிலை வகித்தார்.   நிலக்கோட்டை ஒன்றிய வாக்குகள் என்ன தொடங்கியதும் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது.  எந்த ஒரு இழுபறி இல்லாமல் அனைத்து வாக்கு மையங்களிலும் அதிமுக முன்னிலை வகித்தது.

 

 இறுதியில் 20, 675 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.  திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் 69565 வாக்குகள் பெற்றிருந்தார்.    அதிமுக வேட்பாளர் தேன்மொழி  90734 வாக்குகள் பெற்றிருந்தார்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் தங்கதுரை சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்றார்.  ஒருவழியாக தொகுதியை மீண்டும் அதிமுக தக்க வைத்துக் கொண்டது.
 .   

சார்ந்த செய்திகள்