Dindigul District New News Public Relations Officer Post Acceptance

திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்த நாகராஜ பூபதியை திடீரென தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஜெகவீராபாண்டியனை திண்டுக்கல் மாவட்டத்திற்கு சில தினங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்தனர்.

Advertisment

இதையடுத்து இன்று காலை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஜெகவீரபாண்டியன் பதவி ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடியை நேரில் சந்தித்து பி.ஆர்.ஓ. வாழ்த்து பெற்றார். அதுபோல் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சென்னையில் இருப்பதால் அவர்கள் வந்தவுடன் நேரில் சென்று பி.ஆர்.ஓ. வாழ்த்து பெற இருக்கிறார்.

Advertisment

Dindigul District New News Public Relations Officer Post Acceptance

இந்த நிலையில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பொறுப்பேற்ற ஜெகவீரபாண்டியனை ‘திண்டுக்கல் பிரஸ் கிளப்’ நிர்வாகிகளான தலைவர் நக்கீரன் தலைமை நிருபர் சக்திவேல், செயலாளர் வேந்தன் டி.வி. நிருபர் வீர மணிகண்டன், பொருளாளர் நெற்றிக்கண் நிருபர் பிரதீப் குமார். து ணைத் தலைவர் தினகரன் நிருபர் உதயசங்கர், துணைச் செயலாளர் கேப்டன் டி.வி. நிருபர் கருணாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதை த்தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களும் புதிதாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.ஒ.வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.