/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/din334.jpg)
திண்டுக்கல் மாவட்டம், மலைக்கோட்டை சுற்றியுள்ள ஆர்.வி.நகர், முத்தழுகுபட்டி, அய்யங்குளம், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (28/12/2020) பவுர்ணமியை முன்னிட்டு தடை உத்தரவை மீறி இந்து அமைப்பினர் காள அகதீஸ்வரர் அபிராமி அம்மன் சிலையுடன் கிரிவலம் செல்ல ஊர்வலமாக கிளம்பினர். அப்பொழுது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/din32.jpg)
இதனை தொடர்ந்து சாமி சிலைகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். பின்னர் சிவபக்தர்கள் சாமி சிலையுடன் கிரிவலம் செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Follow Us