dindigul district incident police investigation

Advertisment

திண்டுக்கல் அருகே தலை துண்டித்து வாலிபரைக் கொலை செய்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று திண்டுக்கல் அருகே உள்ள ஆனந்தன் கோட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியைமர்மநபர்கள் வெட்டிதலைவன்கோட்டைபேருந்து நிறுத்தம் அருகே வீசி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல்தாலுகாகாவல்துறையினர் சம்பவஇடத்திற்குச்சென்று அவரதுஉடலைத்தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வட்டப்பாறை அரசுஆரம்பச்சுகாதார நிலையம் அருகே அவரது உடல் கிடந்தது.

இதனையடுத்து, காவல்துறையினர் கொலையாளிகளைத்தீவிரமாகத்தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமாருக்கும், சிவனுக்கும்சட்டவிரோதமாகசில்லறையில் மதுபானங்கள் விற்பனை செய்வதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தலையை வீசி சென்றஇடத்திலிருந்தசிசிடிவிகேமராவில்பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

அதனைத்தொடர்ந்து எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. அருண் கபிலன் மேற்பார்வையில் காவல்துறைஇன்ஸ்பெக்டர்பாஸ்கரன் தினகரன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை வலை வீசித் தேடி வந்தனர். இந்த கொலை வழக்குதொடர்பாகசாமியார் பட்டியைச் சேர்ந்த மன்மதன் கார்த்திகேயன்,பட்டிவீரன்பட்டியைச்சேர்ந்தசங்கரபாண்டி,மருதீஸ்வரர், தேனியைச் சேர்ந்த ராம்குமார், மணிகண்டன், ராஜா ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இவர்கள் அனைவரும் மதுபான விற்பனையில் கைதான அனுமன் கோட்டையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர்இன்பராஜின்கூட்டாளிகள் ஆவர். அதோடுஇன்பராஜ்வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11,500மதுபாட்டில்களைகாவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை காவல்துறையினருக்குஸ்டீபன்தான் தெரிவித்திருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்தனர். அதனால் அனுமந்தராயன் கோட்டையில் செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று மாலை மது குடித்துக் கொண்டிருந்தஸ்டீபனைமேற்படி கும்பல் வெட்டியது தெரிய வந்துள்ளது.இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திசிறையில் அடைத்துள்ளனர்.