
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நல்லாம்பட்டி காவேரி நகரைச் சேர்ந்த 60 வயது முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசம் அடையவே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வேகமாகப் பரவி வருகிறது. புதன்கிழமை வரை 601 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 120க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல், கரூர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 40 பேருக்கும், நத்தத்தில் 15 பேர், கொடைக்கானல் 15 பேர், ஆத்தூரில் 8 பேர், வேடசந்தூர் 6 பேர், பழனி 5 பேர், ஒட்டன்சத்திரம் 3 பேர், நிலக்கோட்டை 2 பேர் என மொத்தம் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 பெண்கள் மற்றும் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட நான்கு குழந்தைகளும் இரண்டு சிறுவர்களும் முதியவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 32 பேர் குணமடைந்துவீடு திரும்பியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)