Advertisment

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

dindigul corporation commissioner home search

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் காஞ்சிபுரத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது கொரோனா காலகட்டத்தில் கிருமிநாசினி கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

DVAC dindigul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe