Advertisment

கார் மீது அரசு பஸ் மோதி விபத்து...ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி...!

திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மைய நாயக்கனூர் அருகே ஐயப்ப பக்தர்கள் மூன்று பேரும் அவர்களின் குழந்தைகள் இரண்டு பேரும் மதுரை வழியாக திண்டுக்கல் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர். அந்த கார் அம்மையநாயக்கனூர் அருகில் வரும் பொழுது கார் டயர் திடீரென வெடித்ததால் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையில் மாற்று பகுதியில் தடுப்பு சுவரை உடைத்து சென்றது.

Advertisment

Dindigul Accident

அப்போது கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது அந்த ஐயப்ப பக்தர்கள் வந்த கார் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவர் பெயர் சுந்தர் என்றும் அவர்தான் காரை ஓட்டி வந்ததார் என்றும் கூறப்படுகிறது. காரில் வந்த அஸ்வின், சமுத்திராதேவி ஆகிய இரண்டு சிறுவர்கள் படுகாயத்துடன் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்களின் அடையாள அட்டையில் அயப்பாக்கம் திருவள்ளூர் என இருந்தது. இதையடுத்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment
Dindigul district iyappan road accident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe