Skip to main content

குப்பைக்கிடங்கில் கட்டப்படும் தரைநிலை தண்ணீர்தொட்டி! பொதுமக்கள் எதிர்ப்பு!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு மேற்கே சித்தையன்கோட்டை சாலையில் பேருந்து நிறுத்தம் எதிரே ஒரு லட்சம் கொள்ளளவு உள்ள தரைநிலைத் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஆத்தூர், அம்பாத்துரை, வீரக்கல், சீவல்சரகு உட்பட கிராம ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

 

w


 புதிதாக கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டி பகுதி ஏற்கெனவே குப்பைக்கிடங்காக இருந்ததால் தண்ணீர் தொட்டி கட்டப்படும் இடத்தைச் சுற்றி டன் கணக்கில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், துணிக் கழவுகள் மலைபோல் குவிந்துள்ளன. இதனால் தரைநிலை தண்ணீர்தொட்டி உறுதியற்ற நிலையில் கட்டப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் செய்கின்றனர். 

 

w


இதுகுறித்து ஆத்தூர் கிராம மக்கள் கூறுகையில்,  ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிக்கு இந்த இடம் குப்பைக்கிடங்கு என்று தெரியும். தெரிந்திருந்தும் அங்கு பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிதண்ணீர் தொட்டி கட்ட அனுமதித்துள்ளார். ஆத்தூர் முழுவதும் களிமண் சட்டு உள்ள பூமி. இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் உயரமான கட்டிடங்கள் கட்டும்போது அதிக கவனம் செலுத்தி கட்டவேண்டும். இல்லையென்றால் கட்டிடம் விரிசல் அடையும். இங்கு கட்டப்படும் தரைநிலை தண்ணீர்தொட்டியில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கி வைப்பார்கள்.

 

குப்பைக் கழிவகள் மத்தியில் தண்ணிர் தொட்டி கட்டினால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதோடு தண்ணீரில் அசுத்தங்கள் கலந்து தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. அதனால் தண்ணீர்தொட்டி கட்டப்படும் இடத்தைச் சுற்றியுள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் அகற்றிவிட்டு, தண்ணீர் தொட்டி கட்டினால்தான் உறுதி ஏற்படும். இல்லையென்றால் தண்ணீர் தொட்டி கட்டிடம் விரிசலடையும் என்றார்கள். மாவட்ட ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பான முறையில் தண்ணீர்தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்!
 

சார்ந்த செய்திகள்