Advertisment

ஐ.பி.யின் கோட்டையாக மாறிய ஆத்தூர் தொகுதி  திமுக தொண்டர்கள் உற்சாகம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதி 1989ம் ஆண்டு முதல் தி.மு.க.வின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆத்தூர் தொகுதியில் தாலுகா அலுவலகம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி கொண்டு வந்து தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றார்.

Advertisment

இதுதவிர சின்னாளபட்டிக்கு நிலக்கோட்டை அருகே உள்ள பேரணையிலிருந்து 40கி.மீட்டர் தூரத்திற்கு குடிதண்ணீர் குழாய்களை பதித்து தண்ணீர்; கொண்டு வந்து பொதுமக்களுக்கு வழங்கினார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 17 ஒன்றிய குழு உறுப்பினர்கான வார்டுகளில் 13 வார்டுகளில் தி.மு.க. உறுப்பினர்கள் அமோக வெற்றி பெற்றனர். இதுதவிர ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 2 வார்டு கவுன்சிலர் வார்டுகளில் இரண்டிலும் தி.மு.க. உறுப்பினர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.

Advertisment

dindiguk local election

ஆத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வார்டு எண் 20க்கான மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பி.கோபியை எதிர்த்து கூலித் தொழிலாளியான பாஸ்கரனை நிறுத்தி ஐ.பி. அவர்கள் அமோக வெற்றி பெற வைத்தார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் கோபியை விட 6,574 வாக்குகள் கூடுதலாக பெற்று பாஸ்கரன் அமோக வெற்றி பெற்றார்.

இதுபோல வார்டு எண் 19க்கான மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் இர்ணடு முறை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் எ.ஆர்.பி. முத்துலட்சுமிபரமசிவத்தை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ரா.பத்மாவதியை நிறுத்தி அமோக வெற்றி பெற வைத்தார். அ.தி.மு.க. வேட்பாளர் முத்துலட்சுமிபரமசிவத்தை விட 7687 வாக்குகள் கூடுதலாக பெற்று ரா.பத்மாவதி அமோக வெற்றி பெற்றார். இதுபோல ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 15 ஊராட்சிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

இதுபோல ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சிகளில் அதிக இடங்களை தி.மு.க. ஆதரவு வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதுதவிர ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் தி.மு.க. மற்றும் தனிப்பெரும்பான்மையாக 14 இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது. இதுபோல ஆத்தூர் ஒன்றியத்திலும் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றி மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 வார்டுகளுக்கான மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 16 இடங்களை தி.மு.க. கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

dindiguk local election

ஆத்தூர் தொகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஐ.பெரியசாமி அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று ஐ.பி.யின் கோட்டையாக (தி.மு.க.) ஆத்தூர் தொகுதியை மாற்றி உள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க. தொண்டர்கள் கூறுகையில், தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி தொகுதி மக்களின் அனைவரின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் எங்கள் ஐ.பி. அவர்களின் சேவைக்காக கிடைத்த பரிசு தான் இந்த உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆழ்துளை கிணறுகள், சமுதாய கூடங்கள், அங்கன்வாடி மையங்களை அமைத்துக் கொடுத்துள்ளார். ஆத்தூர் தொகுதி பொதுமக்களின் காவல்தெய்வமாக இருக்கும் ஐ.பி.யார் அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் ஆத்தூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு அமோக வாக்களித்து மாபெரும் வெற்றியை மக்கள் வழங்கியுள்ளார்கள்.

இதன்மூலம் ஆத்தூர் தொகுதி என்றும் ஐ.பி.யாரின் கோட்டை என்பதை உறுதிபடுத்தி உள்ளது என்றனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சாரை, சாரையாக ஐ.பி.யார் அவர்களின் இல்லம் தேடி வந்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Dindigul district local election
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe