Published on 04/06/2021 | Edited on 04/06/2021

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் மகளுக்கும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருந்தது. நிச்சயத்தார்த்தமும் நடந்து முடிந்த நிலையில், ஜூன் 13ஆம் தேதி திருமணம் வைபவத்திற்கு இரு வீட்டாரும் நாள் குறித்தனர். அதன்படி ஜூன் 13இல் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், அந்த திருமண வைபவம் தற்போது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணசாமி வாண்டையாரின் தந்தை துளசி அய்யா வாண்டையார் அண்மையில் இயற்கை எய்தினார். அந்தத் துக்க நிகழ்வால், வாண்டையார் குடும்பம் மிகவும் துயரமாக இருந்துவருகிறது. இதனால், இப்போதைக்குத் திருமண நிகழ்வு வேண்டாமே என்று தினகரன் யோசனைத் தெரிவித்திருக்கிறார். அதன்படி, தினகரனின் மகள் திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அமமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.