Skip to main content

கண் கலங்கிய தினகரன்...

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

புதியபார்வை ஆசிரியர் ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சையில் அவரது தமிழரசி மண்டபத்தில் ஆசிரியர் வீரமணி தலைமையில் நடந்தது. விழாவில் திமுக மாஜி எல்.ஜி, காசி ஆனந்தன், தனியரசு எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு நடராசன் வாழ்க்கை குறிப்பு ஆவணப்படத்தை வெளியிட்டனர்.

 

dinakaran

 

விழா ஏற்பாடுகளை மருப்பா அறக்கட்டளை சார்பில் செய்திருந்தாலும் தினகரனின் அமமுகவினரே நிறைந்திருந்தனர். விழாவில் பேசிய தினகரன். அரசியல் பேசவில்லை. என் சித்தப்பா நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று சின்னம்மா கேட்டுக் கொண்டார். அதனால் என் வேலைகளை தள்ளிவைத்துவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லும் போதே கண்கள் கலங்கி பேச்சை முடித்துக் கொண்டார்.

 

dinakaran

 

சில மாதங்களுக்கு முன்பு நடராசனின் பிறந்த நாளை மறந்த தினகரன் தேர்தல் காலம் என்பதாலோ என்னவோ நினைவு நாளை அனுசரிக்க வந்துள்ளார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். நினைவு நாள் விழாவுக்கு  திவாகரன் உள்பட சசிகலா உறவினர்களை காணமுடியவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர்... நேரில் சென்று கண்ணீர்விட்டு அழுத சூர்யா!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Fan who in a road accident ... Surya to go in person and cry with tears!

 

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்குச் சென்ற நடிகர் சூர்யா அவரது குடும்பத்தினரிடம் கண்ணீர் விட்டு ஆறுதல் சொல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் படமொன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே 'அகரம் அறக்கட்டளை' மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக சூர்யா ரசிகர் மன்றத்தில் நாமக்கல் மாவட்ட கிழக்கு செயலாளராகவும், 15 வருடங்களாக நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தில் இயங்கி வந்தவருமான ஜெகதீசன் என்பவர் கடந்த 21 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த தகவலைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா அவரின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

 

 

Next Story

''உலக அவலங்களை காமெராவில் சிறைப்படுத்திய கலைஞன்''

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் நடக்கும் மோதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்  கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய மறைவுக்கு ஐநா சபை, அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் செய்திகள் வெளியாகிவருகின்றன.

 

அமெரிக்கப் படைகள் திரும்பிய பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவிவருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளரான மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் தொடர்ச்சியாக செய்திகளைச் சேகரித்து வெளியிட்டுவந்தார். இந்நிலையில், ராணுவத்தினருடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். 

 

அவருடைய பூதவுடல் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டுவருவதாக மத்திய அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. டேனிஷ் சித்திக்கின் மறைவுக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும், சக செய்தியாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்

 

உலக அளவில் புகைப்பட கலைஞருக்கான உச்சபட்ச விருதான 'புலிட்சர்' விருதை தனது 38வது வயதிலேயே பெற்றவர் டேனிஷ் சித்திக். மியான்மரில் ரோஹிங்கியா அகதிகள் அனுபவித்த சோகம், முதல் கரோனா அலை நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்கள், அதேபோல் அண்மையில் கரோனா இரண்டாம் அலை தொடக்கத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியபோது இருந்த சூழ்நிலைகள், அதற்கு முன்பாக சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற கலவரக் காட்சிகள், நேபாள நிலநடுக்கத்தில் சிக்கித் தவித்த மக்கள் என அவர் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும் இன்றுவரை அந்தத் துயரங்களின், மாறா வடுவின் வெளிப்பாடாக இருக்கின்றன.

 

மியான்மரில் ரோஹிங்கியா அகதிகள் கையாளப்பட்ட முறை, அவர்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்து அவர் எடுத்த புகைப்படங்களே அவருக்கு உலக விருதான 'புலிட்சர்' விருதைக் கொண்டுவந்து சேர்த்தது. இறுதிமுதல் தவிப்பு, சிலிர்ப்பு, சோகம், பதைபதைப்பு என அத்தனையையும் காமெராவில் சிறைப்படுத்திய அந்த அற்புத கலைஞனை இழந்து நிற்கிறது இந்த மண்.