cv shanmugam

Advertisment

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக விழுப்புரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் பாசறை இணைச் செயலாளர் நூர் அலாவுதீன்.

சி.வி.சண்முகத்தை வாட் ஆப்பில் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தாக புகார் வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட நூர் அலாவுதீனிடம் விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இன்று அதிகாலையில் சி.வி. சண்முகத்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.