Advertisment

 பொய்மூட்டைகளாக அவிழ்த்துவிடுகிறார் தினகரன் - அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு

kasi

Advertisment

அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க, தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என டி.டி.வி தினகரனை சாடினார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

திருவாரூர் ஒன்றியம் திருநெய்ப்பர் ஊராட்சி கடுவங்குடி கிராமத்தில் உள்ள திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 50 குடும்பங்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், ‘’தினகரன் திமுகவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்ற முடியாததால், பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அப்படித்தான் துணை முதல்வர் விஷயத்திலும் பொய் சொல்கிறார்.

Advertisment

தமிழகத்தில் எப்போது எந்த தேர்தல் நடந்தாலும், நாளைய தினம் தேர்தல் நடைபெற்றாலும் இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்.

டெல்டா மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. தினகரனை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் ஒருபோதும் இல்லை’’ என்றார்.

Kamaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe