
தமிழக அரசியல் களம்சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்த கையோடு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கிடையே அமமுக, தேமுதிக கட்சிகள் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. அந்த வகையில், தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஒதுக்கியுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் இரண்டு கட்சிகளை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்வர்கள் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், நாளை தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்துப்பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)