Skip to main content

நடிகர் சங்கத்தில் திலீப் மீண்டும் சேர்ப்பு - பாவனா ஆதரவாளர்கள் கொதிப்பு

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
b d

 

நடிகா் சங்க தலைவராக மோகன்லால் தோ்ந்தெடுக்கப்படடாா். இதனை தொடா்ந்து நடிகா் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகா் திலீப் மீண்டும் சோ்க்கப்பட்டாா்.

 

          மலையாள நடிகா் சங்கம் அம்மா என்ற பெயாில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக நடிகரும் கம்யூனிஸ்ட் எம்.பி யுமான இன்னோசென்ட் இருந்து வந்தாா். இந்த நிலையில் அவருடைய பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் நடிகா் சங்க தோ்தலில் அவா் போட்டியிட போவதில்லை என அறிவித்தாா்.


          இதனை தொடா்ந்து புதிய தலைவருக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகா் மோகன்லாலை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மோகன்லால் போட்டியின்றி தோ்வு செய்யும் நிலை ஏற்பட்டது.


              இந்தநிலையில் நேற்று கொச்சியில் நடிகா் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மோகன்லால் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். செயலாளராக இடைவேளை பாபு, பொருளாளராக ஜெகதீசும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.


               பின்னா் நடந்த கூட்டத்தில் நடிகை பாவனா பாலியியல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் நடிகா் திலீப் நடிகா் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டாா். தற்போது ஓரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடிகா் சங்கத்தில் திலீப் சோ்த்து கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டு தீ்ா்மானம் நிறைவேற்றப்பட்டது.


            அப்போது பேசிய மோகன்லால்....திலீப் பாவனா விவகாரத்தை இங்கு பேசவில்லை. அந்த விவகாரம் வழக்கு சட்டப்படி நடந்து கொணடிருக்கிறது. அந்த விவகாரத்தின் போது திலீப் நடிகா் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டாா். அவா் நீக்கப்படும் போது திலீபிடம் இருந்து எந்த விளக்கம் கேட்காமல் நீக்கப்பட்டாா். ஆனால் அவா் தன்னிடம் இருந்து தன் விளக்கம் கேட்காமலும் அதற்கான காரணத்தை கூறாமலும் நீக்கப்பட்டதற்காக கோா்ட்டுக்கு சென்று இருக்கலாம். 


             ஆனால் அவா் நடிகா் சங்கத்தின் மாண்பையும் மாியாதையும் மதித்து இதுனால் வரையிலும் தன்னை நீக்கப்பட்டதற்காக நடிகா் சங்கத்தை பற்றி எந்த இடத்திலும் ஒரு வாா்த்தை கூட கூறவில்லை. அதை மாியாதையாக இந்த நடிகா் சங்கம் ஏற்று கொண்டு அவரை மீண்டும் சங்கத்தில் இணைக்கிறோம் என்றாா்.


             அப்போது அனைவரும் கைதட்டி அதை ஏற்றுக்கொண்டனா். பாவனா ஆதரவாளர்கள் இதனால் கொதிப்படைந்தனர்.


நேற்று நடந்த நடிகா் சங்க கூட்டத்தில் பாலியியல் சம்பவத்தில் பாவனாவுக்கு ஆதரவாக இருந்த women in cinema collect  நிா்வாகிகளான நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லீங்கல், பாா்வதி ஆகியோா் கலந்து கொள்ளவில்லை.  
                                      

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

“மிகவும் பயமாக உள்ளது” - பாவனா வேதனை

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
bhavana about his case

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, 'வெயில்', 'தீபாவளி', 'ஜெயம்கொண்டான்' என பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வந்த பாவனா அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் தொடர்ச்சியாக நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதையடுத்து சமீப காலமாக மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ச்சியாக மலையாள மற்றும் கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக இவர் நடிப்பில், கேஸ் ஆஃப் கொண்டனா என்ற கன்னடப் படம் கடந்த ஜனவரி 26ஆம் தேதி வெளியானது. இப்போது பிங்க் நோட் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் ஹண்ட், நடிகர், தி டோர் என்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் நடிகர் மற்றும் தி டோர் தமிழிலும் வெளியாகவுள்ளது.   

இந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில், “இது அநியாயம் மற்றும் அதிர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனது வழக்கு தொடர்பான மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு பலமுறை மாற்றப்பட்டு இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை. இதை அறிந்து மிகவும் பயமாக உள்ளது. பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டிய நீதிமன்றத்தில் இப்படியொரு அசம்பாவிதம் நடப்பது வேதனைக்குரியது.

இருப்பினும், நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையுடன், எனக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டத்தை தொடர்வேன். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடைசித் தூணாக இருக்கும் நமது நீதித்துறையின் புனிதம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் எனது பயணத்தைத் தொடர்வேன்” என குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2017ல் பாவனா, தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் கொடுத்தார். அந்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சாட்சியமாக மெமரி கார்டு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.