Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடி மரத்தை புதுப்பிக்க தீட்சிதர்கள்  எதிர்ப்பு

nn

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற பெற்ற நடராஜர் கோவில் வளாகத்துக்குள் நடராஜர் சன்னதி அருகே தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. நடராஜர் கோயிலில் நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

Advertisment

கோவிந்தராஜ பெருமாள் சன்னதி பகுதியில் கொடி மரம் அமைந்துள்ளது. இந்த கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில் மழையால் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. அதை மாற்றி அமைப்பதற்கு கோவிந்தராஜ பெருமாள் சன்னதி நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய கொடி மரத்திற்கு படையல் செய்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று (நவ.3)இரவு சுமார் 8 மணி அளவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு படையல் செய்தனர். அப்போது அங்கிருந்த நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு கோவில் கொடி மரத்தை மாற்றக்கூடாது. பிரமோற்சவம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, அதனால் எந்த பணியும் செய்யக்கூடாது என்று கூறி கொடி மரத்தைச் சுற்றி நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து பட்டாச்சாரியார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நடராஜர் மற்றும் தில்லை கோவிந்தராஜன் பெருமாள் சன்னதி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CHITHAMPARAM police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe