கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ. உ. சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதி என்பவரின் மனைவி லதா ( 51 ) இவரது மகன் ராஜேஷ்(21) பிறந்த நாளான சனிக்கிழமை மாலை அர்ச்சனை செய்வதற்காக சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவிலில் இருந்த தீட்சிதர் தர்ஷனிடம் பூஜை சாமான்களை கொடுத்துவிட்டு மகன் பெயரை கூறுவதற்குள் தீட்சிதர் உள்ளே சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்துவிட்டார்.

Advertisment

அப்போது அந்தப் பெண் நான் நட்சத்திரம், ராசி, மகன் பெயர் எதையுமே கூறாதபோது தாங்கள் எப்படி போய் அர்ச்சனை செய்தீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது தீட்சிதர் ஏன் நீ வந்து உள்ளே செய்யேன், என ஆபாசமாக பேசியுள்ளார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் தீட்சிதர் தர்ஷன் அந்த பெண்மணியை கன்னத்தில் அறைந்து நெட்டிதள்ளியுள்ளார். இதனால் கீழே விழுந்த அவர் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து சிதம்பரம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல்துறையினர் கோவிலுக்கு வந்து இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் தீட்சிதர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.