அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் அவரது மகளை குழந்தை திருமணம் செய்ததற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை ஒட்டி சனிக்கிழமை மாலை சிதம்பரம் கீழ வீதியில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை கலைந்து போக போலீசார் அறிவுறுத்தியும் மறுத்துவிட்டனர். இதனை ஒட்டி போலீசாருக்கும் தீட்சிதர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தீட்சிதர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தீட்சிதர்கள் சாலை மறியலில் தள்ளுமுள்ளு
Advertisment