Skip to main content

டிஜி-ஸ்மார்ட் லேப்; அப்போலோ டயக்னாஸ்டிக்ஸ் புதிய தொடக்கம்! 

Published on 02/05/2025 | Edited on 02/05/2025

 

Digi-Smart Lab; Apollo Diagnostics' new start!

அப்போலோ டயக்னாஸ்டிக்ஸ், சென்னை மாநகரில் இன்று அதன் டிஜி-ஸ்மார்ட் மைய மேற்கோள் ஆய்வகத்தை (CRL) தொடங்கியிருக்கிறது. நோயாளிகளின் சிகிச்சை பராமரிப்பை மேம்படுத்துவதற்கு பிழைகள் இல்லாத இயக்கச் செயல்பாடுகளுடன் நோயறிதலுக்கான கால அளவை மிகப்பெரிய அளவில் விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் முற்றிலும் தானியக்கச் செயல்பாடு கொண்ட ஒரு ஆய்வகம் இது. ஆய்வகத்திற்கு வரும் மாதிரிகளை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கும் காலஅளவில் (TAT) 60% குறைப்பது என்ற நோக்கம் கொண்ட இந்த முன்னோடித்துவ முன்னெடுப்பானது மிக நவீன தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துகிறது; நோயாளிகளின் அறிக்கைகளை மிக விரைவாகவும், துல்லியமாகவும் வழங்குவதன் வழியாக மருத்துவ நோயறிதலுக்கான திறன்களில் ஒரு புதிய தரஅளவுகோலை இது நிறுவும். 

45,000 சதுர அடிபரப்பளவுள்ள இந்த மிக நவீன ஆய்வகமானது, மருத்துவ வேதியியல், நொதி எதிர்ப்பு மதிப்பீடு, சீரவியல், இரத்தவியல் மற்றும் ஹெமஸ்டாசிஸ் என்ற ஐந்து முக்கியமான ஆய்வகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக செயல்படும். ஒருங்கிணைக்கப்பட்ட, டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகிற மற்றும் முற்றிலும் தானியக்க செயல்பாடு கொண்ட மைய ஆய்வகமாக இது இருக்கும். மேம்பட்ட ரோபோடிக்ஸ், உயர் துல்லிய திறன் கொண்ட கேமராக்கள், சிறப்பான அல்கோரிதம்கள் மற்றும் எந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நேர்த்தியான ஒருங்கிணைவு, ஆய்வு பரிசோதனை செயல்பாடுகளில் மேம்படுத்தும், பிழைகளை பெருமளவு குறைக்கும்  மற்றும் மருத்துவ விளைவுகளை கணிசமாக உயர்த்தும். டிஜி-ஸ்மார்ட் லேப்-ன் மிக நவீன தானியக்க செயல்பாடானது, ஒவ்வொரு நாளும் 100,000-க்கும் அதிகமான மாதிரிகள் மிக துல்லியமாக ஆய்வு செய்யப்படுவதை அனுமதிக்கும். இதன் மூலம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகள் சிறப்பாக பூர்த்தி செய்யப்படும். 

சார்ந்த செய்திகள்