இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டிய டிஐஜி

திருச்சி மாவட்டத்தின் புறநகர் காவல்நிலையம் நவல்பட்டு. இந்த காவல்நிலையத்திற்கு கட்டுபட்ட பகுதியில் மத்திய அரசு நிறுவனங்கள் இயங்கி வரும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. இந்த இன்ஸ்பெக்டராக இருப்பவர்கள் தனிக்காட்டு ராஜாவா வலம் வருவார்கள்.

தற்போது இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில்குமரன் என்பரை நேற்றுகாலை மத்திய மண்டல டிஐஜி அலுவலகம் வர சொல்லி அவரே நேரடியாக அலுவலகத்திற்கு வர சொல்லி தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

DIG who suspended the inspector

உத்தரவை வாங்கி கொண்டு நவல்பட்டு காவல்நிலையம் சென்ற இன்ஸ்பெக்டர் சிரித்துக்கொண்டே ஊர்ல விவசாயம் பண்ணமுடியாம இங்கையே இருக்கோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இப்ப சஸ்பெண்ட் பண்ணி என்னை விவசாயம் பண்ண வச்சிருக்காங்க என்று சொல்லிட்டு கிளம்பிட்டாராம்.

எதற்காகஇந்த சஸ்பெண்ட் என்று விசாரிக்கையில், இன்ஸ்பெக்டர்செந்தில்குமரன் பொறுப்பேற்ற முதல் 3 மாதத்தில் கள்ள லாட்டரியை ஒழிக்கிறேன், விபச்சாரத்தை ஒழிக்கிறேன் என்று கடுமையாக நடவடிக்கை எடுப்பது போல் எடுத்து, யார் விபச்சாரம், கள்ள லாட்டரி என சட்டவிரேதமாக வியாபாரம் செய்யும் கும்பலை கண்டுபிடித்து அவர்களை தற்போது தராளமாக புலக்கத்தில் விட்டுவிட்டாராம்.

இதேபோன்று அண்ணநகர் பகுதியில் விபச்சார விடுதி இவருடை ஆசீர்வாத்தில் சக்கைபோடு போடுகிறதாம். இவருடைய நடமாட்டம் அடிக்கடி அந்த பகுதியில் இருக்கிறது என்கிறார்கள்.

DIG who suspended the inspector

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் MIT கல்லூரி இவருடைய லிமிட்டில் இருக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கு முந்தினநாள் டிஐஐி விசிட் வரும்போது இன்ஸ்பெக்டர் மட்டும் மிஸ்ஸிங்காம்.

அதேபோன்று மணிகண்டன் பகுதியில் பதினொராம் வகுப்பு மாணவி பாலியல் கொலை சம்பவத்திற்கு இவர் நேரடியாக செல்லாமல் ஆட்களை அனுப்பியே விசாரித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

இதனால் இவருடைய வேலையில் சரிவர கவனம் செலுத்தாமல் இருப்பதை உணர்ந்த டிஐஜி வழக்குகளை சரியாக பராமரிக்க வில்லை என்றும் விசாரணையில் மந்தநிலை செயல்பட்டுகிறார் என்கிற குற்றசாட்டு எழுதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

போலிஸ் இன்ஸ்பெக்டரை டிஐஜி நேரடியாக அழைத்து சஸ்பெண்ட் செய்தது திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe