Advertisment

குடியிருப்புப் பகுதியில் 32 புதிய சிசிடிவி கேமராக்கள்! டிஐஜி துவக்கி வைத்தார்!!

dig inaugurates cctv in dindigul

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை கரும்புச்சாலை குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் சங்கத் தலைவர் கருப்பையா தலைமையிலும் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை முன்னிலையிலும் பொங்கல் விழா நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 32 சிசிடிவி கேமராக்களை இயக்கிவைத்தார். அதன்பின், விழாவில் பேசிய அவர், திண்டுக்கல் மாவட்டத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பால் குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுவதாகவும் கூறினார். நகர்ப் புறங்களில் ஆடம்பர பங்களாக்கள் இருக்கும் தெருக்களில் சிசிடிவி பொருத்துவது இல்லை, ஆனால் கிராமப்புற மக்கள் சிசிடிவி பொருத்துவதில் ஆர்வமும் அக்கறையும் காட்டி போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகக் கூறி பாராட்டினார். பின்னர் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார் டிஐஜி முத்துசாமி. இந்நிகழ்ச்சியில் கரும்புச்சாலை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisment

cctv dindigul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe