சென்னை கேளம்பாக்கத்தில் வாக்குசேகரிக்க வந்த திமுக வேட்பாளர்களுக்கு அக்கட்சியினர்கொடுத்த வரவேற்பு வாக்கு கேட்டுவந்த வேட்பாளர்களுக்கே அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் இடைத்தேர்தல் தொகுதி திமுக வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் கேளம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது அப்பகுதி திமுக ஆதரவாளர்கள் அவர்களை வரவேற்க புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டனர்.
அதாவது அவர்கள் வாகனத்தில் வாக்கு கேட்டபடி நின்றிருக்க ஜெசிபி மூலம் கிலோ கணக்கில் அவர்கள் மீது பூக்கள் தூவப்பட்டது. அதில் இன்னும் கவனிக்கப்படுவது என்னவென்றால் அவர்கள் மீது மலர்களை தூவ ஜேசிபி ஆப்ரேட்டர் மண் அள்ளும் பகுதியை இடைவிடாது அவர்களின் தலையருகேஅசைத்துதான்.எங்கே தங்கள் மீது ஜேசிபியின் பாகம்பட்டுவிடுமோ என்ற பயத்தில் வேட்பாளர்கள் பயந்தபடியே உறைந்துபோய் குனிந்தபடிவரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சிறிது கவனக்குறைவோ அல்லது தடுமாற்றமோ ஏற்பட்டிருந்தால் வேட்பாளர்கள் மீது மோத வாய்ப்புள்ள அளவிற்கு அவர்கள் தலைக்கு அருகிலேயே ஜேசிபி இயந்திரத்தின் மண் அள்ளும் பக்கம் இருந்தது கூடியிருத்தவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியது.