Advertisment

வித்தியாசமான தர்ப்பணம் செய்த சமூக நல அமைப்பு!

poosaari palayam.

பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சமூக நல அமைப்பினர் வித்தியாசமான முறையில் தர்ப்பணம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர்.

Advertisment

வீட்டில் உள்ளவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு ஆடி அமாவாசை அன்று இறந்தவருக்கு மரியாதை செய்யும் விதமாக படையலிட்டு குடும்பத்தினர் வணங்குவார்கள். ஆனால் வித்தியாசமாக, 1902- லிருந்து 2020 வரைபூசாரி பாளையத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கு மாலை, பழங்கள் என படையலிட்டு அந்த ஊரையே வணங்க வைத்து ஊர் மக்களை நெஞ்சுருக வைத்திருக்கிறார்கள் பூவை சமூக நல அமைப்பினர்.

Advertisment

poosaari palayam.

அது என்ன 1902-லிருந்து கணக்கு? எனக் கேட்டால், ‘பக்கத்தில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆங்கிலேயரால் கட்ட கல்வெட்டு அமைத்தபோது அங்கே வேலை செய்தவர்கள் இந்த ஊர் மக்கள் தான். அப்போதிலிருந்து கணக்கிட்டுதான் மரியாதை செலுத்தினார்கள். இனிஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர் இறந்த மக்களின் நினைவைப் போற்றி தர்ப்பணம் செய்வோம்’ என்கிறார்கள் பூவை சமூக நல அமைப்பினர்.

aadi poosari palayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe