Advertisment

அமித்ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை - இ.பி.எஸ்

m,

Advertisment

டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவரும் பிரதமர் மோடியை நேற்று (26.07.2021) நேரில் சந்தித்துப் பேசினார்கள். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "காவிரி, கோதாவரி நதிகள் இணைப்பது, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், தமிழகத்திற்கு அதிகப்படியான தடுப்பூசி வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்ததாகக் தெரிவித்தார்.இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமித்ஷாவிடம் அரசியல் குறித்து பேசவில்லை என்றும், மோடியிடம் என்ன பேசினோம் என்று அமித்ஷாவிடம் எடுத்துக் கூறினோம் எனத் தெரிவித்தார்.

Amit shah eps ops
இதையும் படியுங்கள்
Subscribe