Advertisment

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பா?-உறவினர்கள் சாலை மறியல் 

Did the woman die due to wrong treatment?-Relatives block the road

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக பெண்ணின் உறவினர்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது பனைமடல். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி செல்லம். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் ஐந்தாவதாக செல்லம் கருத்தரித்திருந்தார். இந்நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 14ஆம் தேதி அவருக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள செல்லத்திடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பேரில் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து செல்லத்துக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக பெண் உயிரிழந்ததாக பெண்ணின் உறவினர்கள் கடந்த இரண்டு மணி நேரமாக ஆத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Treatment Women Salem police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe