வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - அப்பா மீது 2 ஆம் வகுப்பு மாணவி போலிஸில் புகார்!!

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நடராஜபுரம் பகுதியில் வசிப்பவர் ஹனீபா ஜாரா. 7 வயதாகும் இந்த சிறுமி இன்று டிசம்பர் 10ந்தேதி மாலை வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்ககு வந்தார். அங்கு பணியில் இருந்த காவலர்கள் என்ன ஒரு சிறுமி மட்டும் வருகிறாள் என பதட்டமடைந்தனர். காவல்நிலையத்துக்குள் நுழைந்தவள் எனது தந்தை மீது புகார் தரவேண்டும் எனச்சொல்லியுள்ளார்.

POLICE

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

போலிஸார் என்னவோ ஏதோ என பரபரப்பாக அச்சிறுமி வைத்திருந்த பேப்பரை வாங்கி படித்தனர். அதில், எனது அப்பா இஹஸ்ஸானுல்லாத். நீ படிப்பில் முதல் ரேங்க் எடுத்தால் வீட்டில் கழிப்பறை கட்டிதருவதாக சொன்னார். எங்கள் வீட்டில் கழிவறையில்லை. திறந்தவெளியில் தான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இது எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் எல்.கே.ஜிமுதல் தற்போது 2வது படிக்கிறேன். படிப்பில் முதல் ரேங்க் தான் இதுவரை எடுத்து வருகிறேன். ஆனால் கழிப்பறை கட்டித்தராமல் ஏமாற்றி வருகிறார். இதுவும் ஒருவகை ஏமாற்றுதல்தான், எனவே எனது அப்பாவை கைது செய்யுங்கள் அல்லது கழிப்பறை எப்போது கட்டித்தருவார் என எழுத்திக்கொடுக்கச்சொல்லுங்கள் என புகார் கூறியுள்ளார்.

POLICE

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த புகாரை வாங்கிய காவல்துறை ஆய்வாளர் அந்த சிறுமியை உட்காரவைத்து அவரது தந்தையை வரச்சொல்லி விசாரித்து வருகிறார்.

ஒருச்சிறுமி காவல்நிலையம் சென்று தனது தந்தை மீது புகார் தந்துள்ள தகவல் வாணியம்பாடியில் காற்றின் வேகத்தில் பரவ நூற்றுக்கணக்கானவர்களை காவல்நிலையம் முன்குவிய வைத்துள்ளது. வாணியம்பாடி நகரம் பரபரப்பாக உள்ளது.

பிள்ளைகளிடம் போலியா வாக்குறுதி தரக்கூடாது போல. தந்தால் காவல்நிலையத்தில் கம்பி எண்ணவைத்துவிடுவார்கள் போல?...

police vaniyambadi vellure
இதையும் படியுங்கள்
Subscribe