
திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகமானது திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜா முகமது என்பது என்பவருக்கு சொந்தமான வீட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன் என்பவர் அதற்கான வாடகையை ராஜா முகமதுக்கு கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் முறையாக கட்டிடத்திற்கான வாடகை கொடுக்கப்படாததால் கட்டிடத்தின் உரிமையாளர் முகமது ராஜா புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் அடிக்கடி ராஜா முகம்மதுவிற்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் வாடகைக்கு விட்ட கட்டிடத்தில் பசுவை பலியிட்டு புதைத்திருப்பதாக மணிகண்டன் மீது ராஜா முகமது போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காங்கிரஸ் நிர்வாகி மீது மிருகவதை தடைச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் தான் பசுவை அப்படி எதுவும் பலியிடவில்லை என்றுமறுத்துள்ள மணிகண்டன் தனது நண்பர் ஒருவரின் ஜல்லிக்கட்டு மாடு இறந்துவிட்ட நிலையில் அதனை வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று அந்த இடத்தில் புதைத்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow Us