Advertisment

“ராகுல் பேசக்கூடாது என நினைக்கும் சர்வாதிகாரி மோடி” - கே.எஸ். அழகிரி பேட்டி

nn

Advertisment

நாடாளுமன்ற எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகையில்தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பது சர்வாதிகாரி மோடியின் கருத்து. ஏன் பேசக்கூடாது என்று கருதுகிறார் என்றால் ராகுல் காந்தி பேசினால் அதானி விஷயத்தை பேசுகிறார். பொதுவெளியில் அதானி விஷயத்தை பேசினால் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசினால் அரசாங்கம் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அரசாங்கம் பதில் சொன்னால் அந்த பதில் சட்டப்பூர்வமான பதிலாக இருக்க வேண்டும். அதில் அவர்கள் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். எனவே நாடாளுமன்றத்தில் அதைப்போன்ற இக்கட்டான சூழல் வரக்கூடாது என்பதற்காக தன்னுடைய நண்பர் அதானியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மோடி ராகுலை பேசவிடாமல் தடுக்கிறார்.

ராகுல் மிகவும் எளிமையான கேள்விகளை கேட்டார். இந்தியாவில் எந்தத் தொழிலதிபருக்கும் கிடைக்காத சலுகைகள் அதானிக்கு மட்டும் எப்படி கிடைக்கின்றன; நீங்கள் வெளிநாடு செல்கின்ற போதெல்லாம் அதானி கூட வருகிறார் என்ன காரணம்; நீங்கள் சென்று வந்த உடனேயே அந்த நாடுகளுக்கு அவர் சென்று வருகிறார் அதற்கான காரணம் என்ன; நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் ஏராளமான முதலீடுகளோடு, தொழில் ஒப்பந்தங்களோடு வருகிறீர்கள் ஆனால் அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் அதானிக்குத்தான் செல்கின்றனவே ஒழிய மற்ற நிறுவனங்களுக்கு ஏன் செல்லவில்லை என்பதுதான் ராகுலின் எளியகேள்வி'' என்றார்.

congress modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe