உலக மஞ்சள் காமாலை தினத்தையொட்டி கர்ப்பிணிதாய்மார்களின் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய்கண்டறியும் பரிசோதனையைத் துவக்கிவைக்கும் நிகழ்வு மற்றும் உலக கல்லீரல் அயற்சி தினம் கடைப்பிடிக்கும் விதமாக விழிப்புணர்வு புத்தகம் வெளியீட்டு விழாவும் இன்ற (30.07.2021) மதியம் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தனர். உடன் மருத்துவத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.