Advertisment

குழந்தைகளுக்கு நீரிழிவு நோய்; குடும்பத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோகம்

Diabetes in children; the tragedy of umping into the river with the family

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருந்ததால் குடும்பமே ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதிக்குள் வரும்தமிழக கர்நாடக எல்லையான அடிப்பாளாறு பகுதியில் நான்கு சடலங்கள் மிதப்பதாகக் கால்நடை மேய்ப்பவர்கள் காவல்துறைக்குத்தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற மீட்புப் படையினர் இரண்டு பெண் குழந்தைகள் உட்பட நான்கு பேரின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டுக் கிடந்த இருசக்கர வாகனத்திலிருந்தஎண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டவர் சேலம் தாதகாப்பட்டி, நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பது தெரிய வந்தது.

Advertisment

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.ஏற்கனவே பெரிய மகளுக்கு நீரிழிவு நோய் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிய மகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கும் நீரழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த அவர்கள் அடிப்பாளாறு பகுதிக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

incident Mettur police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe