Advertisment

'தோனியின் ஓய்வு வேதனையை தருகிறது'-ஸ்டாலின் ட்வீட் 

 Dhoni's retirement brings pain ...- Stalin's tweet

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெறுவது வேதனை அளிப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியகிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெறுவதை அடுத்து பல பிரபலங்கள் தங்களதுகருத்துகளையும்,பிரியாவிடையுடன்கூடிய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின்இதுகுறித்து ட்வீட்ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில்,

'இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் வேதனை தரும் செய்தியாகும். நெருக்கடியான தருணங்களில் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியைவழிநடத்திய கேப்டன் கூல் அவர்.கிரிக்கெட் வீரராகவும், இந்திய அணியின் கேப்டனாகவும்தோனியின்பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிறகான தோனியின் வாழ்க்கை சிறப்புறஅமைய வாழ்த்துகிறேன்'என தெரிவித்துள்ளார்.

cricket Dhoni stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe