Advertisment

தமிழகத்தில் தோனி தொடர்ந்த வழக்கு; ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை

nn

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்திய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி அங்கும் தோனி மீது, அதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதில் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில், விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஐபிஎஸ் அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரியின்அந்த பதில் மனு நீதிமன்றங்களையும், நீதித்துறையை நம்பும் மக்களையும்அவமதிக்கும் வகையில் இருப்பதாக வாதத்தை வைத்தது தோனி தரப்பு.

இந்த வழக்கின்விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், மேல்முறையீடு செய்ய வசதியாக தீர்ப்பை 30 நாட்களுக்குநிறுத்திவைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Chennai Dhoni highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe