Advertisment

'தளபதி'யை சந்திக்கும் 'தல'!!

;

Advertisment

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை வென்றது. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிய வரவாக மேலும் இரண்டு அணிகள் வர உள்ளதால், தற்போது இருக்கும் அனைத்து அணி வீரர்களும் தொடர்ந்து அதே அணியில் விளையாடுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அணி மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படும் நிலையில், தோனி கண்டிப்பாக சென்னை அணியின் தக்கவைப்போர் லிஸ்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஐபிஎல் வெற்றிகோப்பை சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில், சென்னை அணி நிர்வாகம் அதனை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து வழிபட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதாவது, "டி20 உலகக்கோப்பை முடிந்த பிறகு சென்னை வரும் தோனி, முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளார். ஐபிஎல் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சிதம்பரம் மைதானத்தில் வெற்றிவிழா நடைபெறும். இதில் ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் தோனி கொடுக்க இருக்கிறார். தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை, சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை!" என்றார்.

Dhoni IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe