Advertisment

''மதுரை சித்திரை திருவிழாவிற்கு வாங்க தோனி '' - அழைப்பு விடுத்த ரசிகர்கள்

nn

16 ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றும்வெற்றிபெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன.

Advertisment

கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் சென்னை அணியின் கேப்டன் தோனி, அனைத்து அணிகளையும் அணி வீரர்களையும் விஞ்சி ரசிகர் பட்டாளத்துடன் தொடரின் நாயகனாக திகழ்கிறார். முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர்களும் தோனியைப் புகழ்ந்து வரும் நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும் சென்னை அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங்தோனியை புகழ்ந்துள்ளார்.

Advertisment

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி என்ற நிலையில் சன் ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. முழுதாக சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரமாக சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தை சூழ்ந்து வந்த நிலையில், அங்கு வந்திருந்த சில ரசிகர்கள் 'தோனி மதுரை சித்திரை திருவிழாவிற்கு வாருங்கள்' என்ற போஸ்டர்களை காட்டிய ஆரவாரப்படுத்தினர்.

Festival madurai IPL Dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe