Published on 15/08/2020 | Edited on 15/08/2020

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார். தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த தோனி, தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் பார்த்ததில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் தோனி. அயராத உழைப்பாலும், விடா முயற்சியாலும் இளைஞர்களின் மனதில் அவர் இடம் பிடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.