"அரசியலில் யாரால் வளர்ந்தார்களோ அவர்களையே காட்டி கொடுக்கிறார்கள்" - திவாகரன் மறைமுக சாடல்!

மறைந்த தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன், அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Dhivakaran about Shashikala

அப்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, " உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக, ஊராட்சி , நகராட்சி, பேரூராட்சி , மாநகராட்சி உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் சேர்த்து நடத்த வேண்டும். இல்லை என்றால் தேர்தலில் பல சாகசங்கள் நடத்துவிடும் என்று தெரிவித்தார்.

சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுக, அமமுக , அண்ணா திராவிடர் கழகம் உள்ளிட்ட மூன்று இயக்கங்களும் இணையுமா என்கிற கேள்விக்கு " தொண்டர்களின் மனநிலை அப்படிதான் உள்ளது. ஆனால் சசிகலா ஜனவரி மாதத்தில் வெளியே வருவாரா அவரை சேர்ந்தவர்கள் வரவிடுவார்களா,என்ற கேள்விக்குறிதான் தற்போது உள்ளது.

Dhivakaran about Shashikala

அவரை சிறையிலேயே வைத்துக்கொண்டு இங்கு அரசியல் நடத்துவதற்குத்தான் அவரை நம்பியுள்ளவர்கள் விரும்புகிறார்கள். அது எல்லாம் தற்போது அவர்களிடம் இருந்து வெளியில் வந்தவர்கள் மூலமே வெளியே வருகிறது. கிட்டதட்ட அனைவரும் வெளியே போய்விட்டார்கள்.

அவர்களின் சதியை கண்டு புரிந்து கொண்டு, விரக்தியில் முதலில் வெளியே வந்தது நான் தான். முதலில் அரசியலில் ஓர் நேர்மை இருக்க வேண்டும். பண பலத்தை வைத்து கொண்டு ருசி பார்க்க கூடாது. அரசியலில் யாரால் வளர்ந்தார்களோ அவர்களையே காட்டி கொடுக்கிறார்கள். அவர்களையே கீழே போட்டு மிதிக்கிறார்கள்" என்று மறைமுகமாக சாடினார்.

பின்னர் நிர்மலா சீதாராமன் 5,7373 மெட்ரிக்டன் வெங்காயம் கை இருப்பு இருப்பதாக கூறியிருக்கிறதே என்கிற கேள்விக்கு. " வெங்காயம் கை இருப்பு இருந்தால் ஏன் விலை உயர்கிறது. அதை வெளிக்கொண்டு வரவேண்டியது தானே. உயர்ந்த ஜாதியினர் வெங்காயம் பூண்டு சாப்பிட மாட்டார்கள். அதனால் அவருக்கு இதைபற்றி கவலையில்லை " என தெரிவித்தார்.

admk Dhivakaran sasikala
இதையும் படியுங்கள்
Subscribe