தினமலர் நாளிதழின் பங்குதாரர் ஆர்.ராகவனின் மனைவியும், அந்த நாளேட்டின் ஆசிரியர் ஆர். ராமசுப்பு மற்றும் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாயாருமான சுப்புலட்சுமி (77 வயது) காலமானார்.

Advertisment

dhinamalar paper subbulakshmi tamilnadu cm and deputy cm

சுப்புலட்சுமி மறைவுக்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தினமலர் நாளிதழ் பங்குதாரர்கள் ராமசுப்பு, கோபால்ஜியின் தாயார் சுப்புலட்சுமி காலமானார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். தாயார் சுப்புலட்சுமியை இழந்து வாடும் ராமசுப்பு, கோபால்ஜி மற்றும் தினமலர் குழுமத்திற்கு இரங்கல்" தெரிவித்துள்ளார்.

dhinamalar paper subbulakshmi tamilnadu cm and deputy cm

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தினமலர் நாளிதழ் பங்குதாரர்கள் ராமசுப்பு, கோபால்ஜியின் தாயார் சுப்புலட்சுமி காலமானார் என்ற செய்தியை அறிந்து துயரம் அடைந்தேன். தாயார் சுப்புலட்சுமியை இழந்து வாடும் ராமசுப்பு, கோபால்ஜி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தினமலர் நாளிதழ் பங்குதாரர்கள் ராமசுப்பு, கோபால்ஜியின் தாயார் சுப்புலட்சுமி மறைந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். தினமலர் வளர்ச்சிக்கு துணை நின்ற சுப்புலட்சுமியை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல்" தெரிவித்துள்ளார்.