Advertisment

திருச்சியில் டி.ஆர்.ஐ.யூ மற்றும் சி.ஐ.டி.யூ.வினர் தர்ணா போராட்டம்

Dharna  by DRIU and CITU in Trichy

Advertisment

திருச்சியில், ரெயில்வே தொழிற்சங்கங்களான டி.ஆர்.இ.யூ, சி.ஐ.டி.யூ. ஆகிய தொழிற்சங்க ஸ்லீப்பர், டெப்போ சூப்பர்வைஸர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் ஆகியோர் கடந்த 9 நாட்களாக கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அவர்கள் திருச்சி கோட்ட கமர்சியல் நிர்வாகத்தை கண்டித்து திருச்சி டி.ஆர்.எம். அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகர்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வருவாய் நிலை காட்டவில்லை என்று கூறி டிரான்ஸ்பர் செய்வது;ரயிலில் ஸ்லிப்பர் பெட்டிகளில் அதிகப்படியான வருமானம் காட்டவில்லை என்று சொல்லி 11 டிக்கெட் பரிசோதகர்களுக்கு உடனடி உத்தரவு மூலம் நடவடிக்கை எடுத்தது;குறைவாக வருமானம் காட்டியவர் என 44 டிக்கெட் பரிசோதனைகளின் ஏப்ரல் மாத போக்குவரத்து படிக்காக உதவி வணிக மேலாளரை பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது;அதிக வருமானம் காட்டவில்லை என்பதற்காக ஒருவரை டிக்கெட் செக்கிங் போஸ்ட் இல்லாத அகத்தியம் பணிக்கு மாற்றியது போன்ற திருச்சி கோட்ட கமர்சியல் நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்தனர்.

போராட்டத்திற்கு டி.ஆர்.ஐ.யூ. கோட்ட தலைவர் கரிகாலன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி டி.ஆர்.ஐ.யூ பொதுச் செயலாளர் ஹரிலால், சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், டி.ஆர்.ஐ.யூ. கோட்ட செயலாளர் மாதவன், துணை பொதுச் செயலாளர்கள் ராஜா, சரவணன், உதவி கோட்டச் செயலாளர்கள் சம்பத்குமார், அழகிரி, ரஜினி, சிவக்குமார், தனபால் ஆகியோர் பேசினர். இந்த தர்ணா போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CITU trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe