தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள வெதரம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவருடைய மகன் அக்குமாரி (40). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

Advertisment

இவருடைய சகோதரர் பழனி என்கிற சென்னகேசவனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த சின்னசாமி (63) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி, சென்னகேசவனுக்கும், சின்னசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறை விலக்கிவிட அக்குமாரி சென்றார்.

Advertisment

dharmapuri two peoples incident court judgement

அப்போது சின்னசாமி கத்தியால் தாக்கியதில் அக்குமாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து கம்பைநல்லூர் காவல்துறையினர் சின்னசாமி (63), அவருடைய மனைவி கோவிந்தம்மாள் (60), மகன்கள் வசந்த் (31), ரஞ்சித் (35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (நவ. 12) தீர்ப்பு கூறப்பட்டது.

Advertisment

குற்றவாளிகள் சின்னசாமி, கோவிந்தம்மாள், வசந்த், ரஞ்சித் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பு அளித்தார். இவர்களில் வசந்த் மட்டும் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மற்ற மூவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தர்மபுரியில் இரு வேறு கொலை வழக்குகளில், நேற்று ஒரே நாளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.