கரோனா தொற்றே இல்லாத மாவட்டமாக இருந்த தர்மபுரி மாவட்டத்தில்,முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், கொசப்பட்டி ஊராட்சி, எலவடை கிராமத்தைசேர்ந்த லாரி டிரைவர், சில நாட்களுக்கு முன்பாகதான் டெல்லியில் இருந்து, லாரி வேலையை முடித்துக்கொண்டு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். வந்தவர் அதே ஊரிலேயே தேநீர் கடை நடத்தி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அச்சம் அடைந்த மக்கள் தர்மபுரி மருத்துவமனைக்கு தொடர்புகொண்டுள்ளனர்.
இதையடுத்து அவருக்கு மூன்று சோதனைகள்மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் அதில் பாஸிடிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனால் அப்பகுதியை கரோனா பாதிப்பு உள்ள பகுதியாக அறிவித்துள்ளது. அதே போல அப்பகுதியில் உள்ள மக்கள் நிச்சயம் டீ சாப்பிட சென்று இருப்பார்கள் என்ற காரணத்தால், அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கும்கரோனா டெஸ்ட்எடுக்க தயாராகி வருகிறார்கள். தற்போது டிரைவரின் கும்பத்தினரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்கின்றனர்.
இந்த கரோனா தொற்றுள்ளவரைஅழைத்துவர ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் உதவி நர்ஸ் யாருக்குமே போதுமானகோவிட் 19 பாதுகாப்பு கவசம் இல்லை. இதனால் அவர்கள் பணிக்குச் செல்ல அச்சப்பட்டுள்ளனர், அவர்களுக்கு சாதாரண மாஸ்க் மட்டும் கொடுத்து மிரட்டி அனுப்பியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் கேட்டபோது, “நாங்கள் ஓட்ட மாட்டோம் என்று சொல்லவில்லை, எங்களுக்கு போதுமான பாதுகாப்பு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அதைகூட செய்யாமல் எங்களை மிரட்டி அனுப்புகிறார் மாவட்ட ஆட்சியர்’’ என்றார்.
இதுபோன்ற காலகட்டத்தில் அரசு இனிமேலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் கூடுதல் விளைவை எதிர்கொள்ள வேண்டிய நிலைவரும் என்கிறார்கள் மருத்துவர்கள் .