Advertisment

தோட்டக்கலை விவசாயிகளுக்கு விருது! தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்! 

dharmapuri district collector farmers awards apply online

விவசாயிகள் வருமானத்தை உயர்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தோட்டக்கலைப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகளின் ஈடுபாடு தற்போது அதிகரித்து வருகிறது.

Advertisment

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தோட்டக்கலைப் பயிர்களைசிறந்த முறையில் தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு சாகுபடி செய்துவரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அரசு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா 10 சாதனையாளர் விருதுகளை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

Advertisment

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் இத்துறையின் இணையதளமான www.tnhorticulture.tn.gov.in இல் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

Award dharmapuri district District Collector Farmers online apply now
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe