dharmapuri district children daily wages employee police investigation

தர்மபுரி அருகே, நான்கு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பொம்மியம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 12- ஆம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த 4 வயதே ஆன சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.நடராஜன், சிறுமியிடம் தவறாக நடப்பதை நேரில் பார்த்த உள்ளூரைச் சேர்ந்த சிலர் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். அவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

Advertisment

இதனால் தனக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக வருந்திய அவர், அன்று ஊரை விட்டு வெளியேறினார். சில நாள்கள் கழித்து செவ்வாய்க்கிழமை (டிச. 15) மீண்டும் ஊருக்குள் வந்தார் நடராஜன். சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி கீழே சரிந்து விழுந்தார்.சம்பவ இடத்தில் இருந்த சிலர் அவரை மீட்டு, உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. உடற்கூறாய்வில், அவர் விஷம் குடித்ததால் இறந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதால் பொதுமக்கள் பலர் முன்னிலையில் தன்னை தாக்கியதால் அவமானம் தாங்காமல் அவர் தற்கொலை முடிவு எடுத்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisment