Advertisment

10 வயது சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்! போக்சோவில் அதிரடி கைது!

dharmapuri district child incident father arrested the police

தர்மபுரி அருகே, மகள் என்றும் பாராமல் 10 வயது சிறுமியை பெற்ற தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தைசேர்ந்தவர் சண்முகம். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு2 மகள்கள் உள்ளனர்.

Advertisment

கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தகராறு ஏற்படும்போதெல்லாம் தனலட்சுமி தன் மகள்கள் இருவரையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, அவர் மட்டும் காவேரிப்பட்டணத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். சில நாள்கள் கழித்தே கணவர் வீட்டுக்கு திரும்புவார்.

இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் தனலட்சுமி வழக்கம்போல் மகள்களை விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

சில நாள்களில் வீடு திரும்பிய அவர், திடீரென்று காரிமங்கலம் காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் மனு அளித்தார். அதில், தான் குடும்பத்தகராறு காரணமாக பெற்றோர் வீட்டுக்குச் சென்று இருந்தபோது, வீட்டில் இருந்த எனது 10 வயதான இரண்டாவது மகளை கணவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்று தெரிவித்து இருந்தார்.

புகாரின்பேரில், சண்முகத்தை காவல்துறையினர் நேரில் விசாரித்தபோது, தன் மகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை காரிமங்கலம் காவல்துறையினர், பாலக்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் காவல்துறையினர், சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Police investigation child dharmapuri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe