Skip to main content

10 வயது சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்! போக்சோவில் அதிரடி கைது!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

 

dharmapuri district child incident father arrested the police

 

 

தர்மபுரி அருகே, மகள் என்றும் பாராமல் 10 வயது சிறுமியை பெற்ற தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

 

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்தவர் சண்முகம். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

 

கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தகராறு ஏற்படும்போதெல்லாம் தனலட்சுமி தன் மகள்கள் இருவரையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, அவர் மட்டும் காவேரிப்பட்டணத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். சில நாள்கள் கழித்தே கணவர் வீட்டுக்கு திரும்புவார்.

 

இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் தனலட்சுமி வழக்கம்போல் மகள்களை விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

 

சில நாள்களில் வீடு திரும்பிய அவர், திடீரென்று காரிமங்கலம் காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் மனு அளித்தார். அதில், தான் குடும்பத்தகராறு காரணமாக பெற்றோர் வீட்டுக்குச் சென்று இருந்தபோது, வீட்டில் இருந்த எனது 10 வயதான இரண்டாவது மகளை கணவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்று தெரிவித்து இருந்தார்.

 

புகாரின்பேரில், சண்முகத்தை காவல்துறையினர் நேரில் விசாரித்தபோது, தன் மகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை காரிமங்கலம் காவல்துறையினர், பாலக்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் காவல்துறையினர், சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் சிறார் பாலியல் கொலை சம்பவங்கள்; தர்மபுரியில் மீண்டும் அதிர்ச்சி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Continued incidents of againt child ; Shock again in Dharmapuri

அண்மையில் புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கஞ்சா போதை இளைஞர் மற்றும் முதியவர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இதேபோன்ற சிறார் பாலியல் கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது மிட்டா ரெட்டி ஹள்ளி கிராமம். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். பங்குனி உத்திரத்திற்காக பழனி மலைக்கு செல்வதற்காக அந்த சிறுவன் மாலை அணிந்து இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சிறுவன் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்களும் பெற்றோர்களும் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றதை சிலர் பார்த்ததாக கூறியுள்ளனர். அன்று மாலை வரை சிறுவன் கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சிறுவனை அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட பிளஸ் 2 மாணவனை அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் பிளஸ் டூ மாணவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், இதனை வெளியே சொல்லி விடுவான் என்ற பயத்தில் கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூர சம்பவமும் வெளியே வந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த பிளஸ் டூ மாணவனை அழைத்துச் சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுவனின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'அண்ணன் கொடுத்த சீர் என சொன்னதை கேட்டு...'- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Chief Minister M. K. Stalin's speech In dharmapuri

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் 114.19 கோடி மதிப்பில் 75 திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதுபோல் 350.50 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 993 திட்டங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கோவை சரக டிஐஜி தலைமையில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் என பலரும் இந்த நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தர்மபுரி என்ற உடனே எனக்கு நினைவுக்கு வருவது ஒகேனக்கல்லில் 1,928 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். அந்த திட்டத்திற்கு 2008 ஆம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் இருந்தபோது ஜப்பானுக்கு சென்று நிதி வசதிகளையும், திட்டமிடுதல்களையும் செய்தேன்.

முதலமைச்சர் கலைஞர் அந்தத் திட்டத்தை அன்று தொடங்கி வைத்தார். ஆனால் ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. உடனே நானே இங்கு நேரில் வந்து போராட்டம் நடத்தினேன். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியோடு உங்களிடையே நின்று கொண்டிருக்கிறேன்.

ஔவையின் வரலாற்றில் எப்படி தர்மபுரிக்கு பங்கு இருக்கிறதோ அதேபோல தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் தர்மபுரிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1989 ஆம் ஆண்டு இதே தர்மபுரியில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற அமைப்பை முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். அதன்படியே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கின்ற முகாம் இங்குதான் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் மகளிர் வாழ்வில் ஒளிவிளக்காக இருந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை இயற்றியதும் கலைஞர்தான். இது பெண் இனத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வழங்கிய அதிகாரக் கொடை.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு டிவியில் ஒரு பேட்டியை பார்த்தேன். அதில் ஒரு பெண் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் ஸ்டாலின் அண்ணன் எங்களுக்கு கொடுத்த சீர் என்று சொன்னார். அப்பொழுது எனக்கு என்ன தோன்றியது என்றால், நம் திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழக மகளிர்க்கும் இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி நெகிழ்ந்து போனேன். மத்திய அரசு மாநிலங்களின் நிதி ஆதாரத்தை பறித்து அழிக்க நினைக்கிறது. பிரதமர் வருவது சுற்றுப்பயணம் அல்ல வெற்றுப் பயணம். தமிழ்நாட்டை சுரண்டியவர்களால் இது போன்ற சாதனை பட்டியலை வெளியிட முடியுமா?'' என்றார்.