Skip to main content

தமிழகத்தில் 71.87% வாக்குப்பதிவு - முந்தியது தர்மபுரி! பின் தங்கிய தென்சென்னை!

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

 


 தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87 சதவிகித வாக்குகள்  பதிவாகியுள்ளன.   தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

d

 

மக்களவைக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் முதல் கட்டமாக  கடந்த 11ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இருக்கும் 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.  வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இரவு 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம் விவரம்:

 

1. திருவள்ளூர்- 72.02

2. வடசென்னை-61.76

3. தென்சென்னை-56.41

4. மத்தியசென்னை-57.86

5. ஸ்ரீபெரும்புதூர்-60.61

6. காஞ்சீபுரம்-71.94

7. அரக்கோணம்-75.45

8. கிருஷ்ணகிரி-73.89

9. தர்மபுரி-80.49

10.திருவண்ணாமலை-71.27

11. ஆரணி-76.44

12. விழுப்புரம்-74.96

13. கள்ளக்குறிச்சி-76.36

14. சேலம்-74.94

15. நாமக்கல்-79.75

16. ஈரோடு-71.15

17. திருப்பூர்-64.56

18. நீலகிரி-70.79

19. கோவை-63.67

20. பொள்ளாச்சி-69.98

21. திண்டுக்கல்-71.13

22. கரூர்-78.96

23. திருச்சி-71.89

24. பெரம்பலூர்-76.55

25. கடலூர்-74.42

26. சிதம்பரம்-78.43

27. மயிலாடுதுறை-71.13

28. நாகப்பட்டினம்-77.28

29. தஞ்சாவூர்-70.68

30. சிவகங்கை-71.55

31. மதுரை-62.01

32. தேனி-75.28

33. விருதுநகர்-70.27

34. ராமநாதபுரம்-68.26

35. தூத்துக்குடி-69.41

36. தென்காசி-71.60

37. நெல்லை-68.09

38. கன்னியாகுமரி-62.32
 

சார்ந்த செய்திகள்