Advertisment

3 மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் விடுதலை மிகுந்த வேதனை அளிக்கிறது - இந்திய தேசிய லீக்

dharmapuri bus fire

Advertisment

இந்திய தேசிய லீக் தேசிய பொது செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்ஜிகே நிஜாமுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

91-96-ம் ல் அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி ஜெயலலிதா உள்பட அமைச்சர்கள் பலர் மீது ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு வழக்கில் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதியன்று ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை விதித்து தனிக் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பஸ்சை தர்மபுரி அ.தி.மு.க.வினர் சிலர் தீ வைத்து எரித்தனர்.

அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய மாணவிகள் தீயில் எரிந்து மரணமடைந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனிப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 3 பேரும் அப்பீல் செய்தனர். அதில் 2016-ம் ஆண்டு அவர்கள் மீதான தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிடப்பட்டது. எனவே அவர்கள் 3 பேரும் தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் கைதிகளை விடுதலை செய்வதாக எடப்பாடி அரசு அறிவித்தது . இதன்படி பேருந்து எரிப்பு வழக்கில் தொடர்புடைய இவ்வளவு பெரிய கொடூரத்தை செய்த அதிமுகவினர் நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது மிகுந்த வேதனை அளிக்கிறது

ஆனால் இவர்களைப்போல் தூக்குதண்டனை பெறாத , கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் பலர் இருந்தும் அதில் சிலர் நடமாட முடியாத அளவிற்கு நோய்வாய்ப்பட்டிருந்தும் ஒருவருமே விடுதலை செய்யப்படாததும் இவ்வரசின் சிறுபான்மை விரோத போக்கை காட்டுகிறது என கூறியுள்ளார்.

bus dharmapuri fire
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe