Advertisment

’நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வரும்’-முதல்வர் பழனிச்சாமி

தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைப்பெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும்’என்று தெரிவித்தார்.

Advertisment

c

அவர் மேலும், ‘வரக்கூடிய நாடாளூமன்ற தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். அம்மா மறைவுக்கு பிறகு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல். இதில் வெற்றி உறுதி. நாட்டை பாதுகாக்க திறைமையான பிரதமர் வேண்டும். மோடி திறமையான பிரதமர். இதை கருதியே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும். மக்கள் எதிர்பார்க்கும் கட்சிகளும் கூட்டணியில் இணைய உள்ளன’என்று தெரிவித்தார்.

Advertisment

மேலும், அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவை சூடு,சொரணை இல்லாத கட்சி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்ததற்கு பதிலடியாக, ’பாமகவுக்கு சூடு,சொரணை இல்லையா என்று கேட்ட ஸ்டாலினுக்குத்தான் இல்லை. திமுகவையும், ஸ்டாலினையும் விமர்சித்த வைகோவை இணைத்தது எப்படி? திமுகவை கடுமையாக வசைபாடிய வைகோ எப்படி அக்கட்சியில் இணைந்தார்?’என்று கேள்விகளை எழுப்பினார்.

edappadipalanisamy vaiko stalin arur dharmapuri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe