திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகனுக்கு தருமபுரம் ஆதினத்தால் 'கிராமிய இசை கலாநிதி' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் நாட்டுப்புற இசைப் பாடகர் வேல்முருகன் கச்சேரி நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவருக்கு தருமபுர ஆதினத்தால் 'கிராமிய இசை கலாநிதி' பட்டம் வழங்கப்பட்டது. மேலும் தருமபுரம் ஆதீனத்தின் ஆஸ்தான பாடகராகவும் வேல்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் பாடகர் இயேசுதாஸ் இந்த பொறுப்பில் இருந்தார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முன்னிலையில் வேல்முருகனுக்கு பட்டம் வழங்கி தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது.